பெல்ஜியம் நாட்டின் பிரஸ்சல்ஸ் விமான நிலையம் மற்றும் மெட்ரோ புகையிரத நிலையம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிக்கு பணம் வழங்கியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு பிரித்தானிய நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி உள்ளது. கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற இந்த தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது அப்ரினி என்பவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பணம் வழங்கியதாக தெரிவித்து பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட முகமது அலி அகமது, ஜகாரியா போபாசில் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் முகமது அலி அகமதுவுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஜகாரியாவுக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.