Home பிரதான செய்திகள்உபாதையிலிருந்து டேல் ஸ்டெயின் குணமடைந்துள்ளார்

உபாதையிலிருந்து டேல் ஸ்டெயின் குணமடைந்துள்ளார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உபாதைக்கு உள்ளாகியிருந்த தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 2017ம் ஆண்டு ஜுன் மாதம் அளவில் மீண்டும் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாட எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பேர்த்தில் கடந்த மாதம் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றின் போது அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டதனை அடுத்து அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.   தற்போது உடல் தேறி வருவதாகவும், ஜனவரி மாதம் முதல் பயிற்சிகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும் அடுத்த வருடம் ஜுன் வரையில் எந்த சர்வதேச போட்டிகளிலும் அவரால் பங்கேற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More