பண்டார வன்னியன் நாடகத்தை எழுதியவரும் வன்னி மண்ணின் சரித்திரத்தை தன் எழுத்துக்களில் வடித்தவருமான கலாநிதி முல்லைமணி நேற்று காலமானார். முல்லைமணி என்ற புனைபெயரில் பல்வேறு படைப்புக்களை எழுதிய கலாநிதி வே. சுப்பிரமணியம் எழுத்துலகில் நாடகம், சிறுகதை, நாவல், கவிதை, வரலாற்று ஆய்வுகள், இலக்கிய திறனாய்வு என பல்வேறு துறைகளில் தனது புலமையை ஆழமாக பதித்தவர்.
இவரது ‘பண்டாரவன்னியன்’ வரலாற்று நாடகம் இதுவரை ஐந்து பதிப்புகள் கொண்டு வெளியாகியதுடன் இன்றுவரை நாடகமாகவும் கூத்தாகவும் பேணப்பட்டு வருகின்றது.
தணியாத தாகம் (பண்டாரவன்னியன் – வரலாற்று நாடகம்), மல்லிகைவனம் – 1985, வன்னியின் கதை, கொக்கிளாய் மாமி, அரசிகள் அழுவதில்லை – 1977, கொண்டுவந்த சீதனம் – 2005, வன்னியர் திலகம் – 1996, கமுகஞ்சோலை – 2000, இலக்கியப்பார்வை- 1999?, வன்னியியற் சிந்தனை – 2001, தமிழ்மொழி பயிற்சி – 1975 முதலியன இவர் எழுதிய நூல்களாகும்.
2015 அரச இலக்கிய விருது விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலாநிதி முல்லைமணிக்கு சாஹித்ய ரத்னா விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.