வார்தா புயல் பாதித்த சில பகுதிகளுக்கு தமிழக முதலமைச்சர்; ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்துள்ளார். நேற்றையதினம் பன்னீர்செல்வம் சென்னை மாநகராட்சியில் செயல்படும் ரிப்பன் மாளிகைக்கு சென்று ஆலோசனை நடத்தியதன் பின்னர் சென்னையில் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை விரைந்து செயல்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்கவும், மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற முதலமைச்சர் பன்னீர்செல்வம் பொதுமக்களை பார்த்து ஆறுதல் தெரிவித்ததுடன் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
மேலும் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை விரைந்து முடிக்கவும், நிவாரண பணிகளை தாமதம் இன்றி வழங்கவும் உத்தரவிட்ட தமிழக முதலமைச்சர் பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.