நைஜீரியாவில் போகோஹராம் அமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல்கள் இடம்பெறுவதனால் அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ‘போர்னோ’ மாகாணம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதனால் பொதுமக்கள் உணவின்றி தவிக்கின்றனர்.
இந்த மோதல்கள் காரணமாக 26 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 4 லட்சம் குழந்தைகள் பசி பட்டினியால் தவிக்கின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில் இவர்களுக்கு சர்வதேச நாடுகள் உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை உதவிகள் வழங்காவிடில் 5-ல் ஒரு பங்கு குழந்தைகள் அதாவது 80 ஆயிரம் குழந்தைகள உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாக ஐ.நா.வின் யூனிசெப் செயல் இயக்குனர் அந்தோனி லேக், தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி பசி பட்டினியால் தவிக்கும் குழந்தைகளுக்கு மனிதாபிதமான உதவிகள் தேவைப்படுவதாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை ஐ.நா.வும், சர்வதேச தனியார் நிறுவனங்களும் நன்கொடை பெறுவதற்காக மிகவும் திரித்து கூறுவதாக நைஜீரிய ஜனாதிபதி முகமது புகாரி குற்றம் சுமத்தியுள்ளர்h.