ஊழல் தடுப்பு சட்டத்தில் கீழ் ஜெயலலிதாவிடம் விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா மறைந்துவிட்டதால் மனு காலாவதியாகிவிட்டது என்று கூறியுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு ராஜவேலு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதா மக்கள் பிரதிநிதி என்பதால் அவரை அரசு ஊழியராக கருதக்கூடாது என்றும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெயலலிதாவிடம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதன்போது, ஜெயலலிதா மறைந்துவிட்டதால் மனு காலாவதியாகி விட்டது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.