சென்னைக்கு சூழலியல் அழிவையும் நடுத்தர வர்க்கத்துக்கு மீண்டு எழக்கூடிய பொருளியல் அழிவையும் கொண்டு வந்த வர்தா புயல் ஏழைகளின் ஒருதலைமுறை வாழ்வை புரட்டிப் போட்டுவிட்டு சென்றிருக்கிறது. இவர்களின் வாழ்வாதாரம் வேரருந்த மரமென சாய்ந்து கிடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
புயலில் வீடிழந்த, கூரையிழந்த வீட்டிலிருக்கும் குழந்தைகள் பலர் பள்ளிக் கல்வியைத் தொடர முடியாமல் போய்விடும். ஒருமுறை அழிவைச் சந்தித்த என் குடும்பத்திலும் இது நடந்தது. செயற்கைப் பேரழிவு, இயற்கைப் பேரழிவென பல பேரழிவுகளை சந்திக்கும் ஒடுக்கப்பட்டோர், ஏழைகளின் குழந்தைகளை அரசின் பேரிடர் மேலாண்மை குழுக்கள் கவனமெடுப்பதே இல்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது போன்ற பேரழிவு சமயங்களில் பள்ளி ஆசிரியர்கள் தனி அக்கறையுடன் செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்டுப் பள்ளிக்கு வராத குழந்தைகளை தேடிக் கண்டுப்பிடித்து ஆதராவாய் நின்று அவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.