குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டைப் பணியாளர்கள் போராட்டத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளனர். பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்தும் நீடித்தால் பணியிலிருந்து நீக்கப்படுவர் என நிர்வாகம் அறிவித்ததனைத் தொடர்ந்து பணியாளர்கள் போராட்டத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளனர்.
கடந்த 7ம் திகதி முதல் போராட்டம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பணியாளர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்த காரணத்தினால், கடற்படையினர் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாளை பி.ப 2.00 மணிக்கு முன்னர் பணிக்கு வராத மாகம்புர துறைமுக ஊழியர்கள் பணியிலிருந்து விலகியதாக கருதப்படுவர்
Dec 14, 2016 @ 16:02
மாகம்புர துறைமுக முகாமைத்துவ நிறுவனம் அனைத்து ஊழியர்களையும் நாளைய தினம் (15.12.2016) பி.ப 2.00 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென்று அறிவித்துள்ளது. பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் சுயவிருப்பின் பேரில் பணியிலிருந்து விலகியிருப்பதாக கருதி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களை அறிவூட்டும் ஊடகவியலாளர் மகாநாடு இன்று துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் , துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் நடைப்பெற்றது. இவ்வூடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, அமைச்சரவை தீர்மாணத்திற்கமைவாகவே இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் மாகம்புர துறைமுக முகாமைத்துவ தனியார் நிறுவணத்தில் பணியாற்றும் ஊழியர்களாவர். கடந்த சில நாட்களாக அத்துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்ட நாசகார செயற்பாடுகள் காரணமாக தற்பொழுது நாம் பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளோம். கப்பற் செயற்பாடுகளிற்கு தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முகாமைத்துவ கட்டிடத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் சி.சி.டி.வி கமராக்கள் தேசப்படுத்தப்பட்டுள்ளது. நீர் தாங்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் கப்பல்களின் செயற்பாடுகளிற்கு தொடர்ச்சியாக தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதனை காட்டிலும் மிக முக்கியமாக விடயம் யாதெனில் கப்பல்களை எதேச்சாதிகாரமான முறையில் தரித்து வைப்பதாகும். இச்செயன்முறையினை கடற்கொள்ளையாகவே சர்வதேச சமூகம் கருதுகின்றது. இதன் காரணமாக இன்று அம்பாந்தோட்டை துறைமுகம் பாதுகாப்பு குறைந்த துறைமுகமாகவே சர்வதேச துறைமுகம் கருதுகின்றது. நாடென்ற ரீதியில் இது பாரிய நெருக்கடி நிலையாகும். எனவே அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கும் நோக்குடன் அரசாங்கம் என்ற வகையில் ஒரு சில தீர்மாணங்களை மேற்கொண்டுள்ளோம். அதனடிப்படையில் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு முன்னர் பணிக்கு திரும்புமாறு அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பணிக்கு திரும்பாத ஊழியர்களின் வெற்றிடங்களின் பொருட்டு அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மிரிஜ்ஜவில கிராமத்திலிருந்து புதிதாக ஊழியர்களை இணைத்துக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். இவ்வாறான நாசகார வேலைகளில் ஈடுப்பட்ட அனைவருக்கெதிராகவும் சட்ட நடவடிக்கையெடுக்கப்படுமென …’ அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஊடகவியலாளர் மகாநாட்டில் மேலும் குறிப்பிட்டார்