குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் தீர்மானங்கள் இலங்கையை பாதிக்கும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்கக தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தனது வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளதாகவும் இது இலங்கையை மோசமாக பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் கடந்த ஆண்டில் அமெரிக்க திறைசேரியின் வட்டி வீதம் உயர்த்தப்பட்டதனால் 2400 மில்லியன் டொலர் நிதி இலங்கையை விட்டு வெளியே சென்றதாகவும் தெரிவித்துள்ளார். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி பல்வேறு வழிகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் புதிய அரசியலமை சம்பிக்க ரணவக்க தொிவித்துள்ளாா். இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பானது ஒரு கட்சி அல்லது ஒரு தலைவரின் தேவைகளுக்கு ஏற்பவே அமைந்தது எனவும் இந்த முறை அரசியலமைப்பு திருத்தமானது அனைவரது இணக்கத்துடனும் மேற்கொள்ளப்படும் எனவும் வெளிநாட்டு சக்திகளினதோ அல்லது அடிப்படைவாதிகளின் அழுத்தங்களுக்கு அமைவாகவோ இடம்பெற மாட்டாது எனவும் தொிவித்துள்ளார்.