குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாடு பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாடு எந்த திசை நோக்கி நகர்கின்றது என்பதனை உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், தொழிலாளர் சட்டங்களுக்கு மதிப்பளிக்காது ஊழியர்கள் நாட்டில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல தாமரை வீதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் துறைமுகம் மட்டுமன்றி காணி பூமிகளையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளாகத் தெரிவித்துள்ளார். ஏதாவது ஒர் விடயத்தைப் பற்றி பேசினால் டீல் போடப்படுவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.