Home இலங்கைவதந்திகளை நம்ப வேண்டாம்

வதந்திகளை நம்ப வேண்டாம்

by editorenglish

“உயர்மட்ட குழுவினரால் இறுதி பெயர் பட்டியல் வெளியிடப்படும், தவறான வதந்திகளை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டாம்” என வேட்பாளர்களிடம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில்(2025) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவதற்கு விண்ணப்பித்துள்ள வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிப்பதற்கான தேர்வுகள் இடம்பெற்றுவரும்  இவ்வேளையில், ஒரு சிலரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தனித் தீர்மானம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச் செயலாளரும் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், உள்ளடங்கிய உயர்மட்ட குழுவினர்  இணைந்து எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமையவே வேட்பாளர்களின் இறுதி பட்டியல் தயார் படுத்தப்படும்.

ஆகவே எந்த ஒரு நபரும் தவறான வதந்திகளை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டாமென கட்சியின் உயர்பீடம் கேட்டுக்கொண்டுள்ளது அதேவேளையில், இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி பெயர் பட்டியல் வெளியிடப்படும் என  தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More