குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிடிக்கப்படும் போதைப் பொருட்கள் மீளவும் சந்தைக்கு செல்வதாக பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். அதிகாரிகளினால் கைப்பற்றப்படும் போதைப் பொருட்களில் 90 வீதமானவை மீளவும் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பல நாடுகளில் செய்யப்படுவதனைப் போன்று இந்தப் போதைப் பொருட்கள் பகிரங்கமாக பொதுமக்கள் முன்னிலையில் எரிக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார். அண்மையில் மீட்கப்பட்ட பாரியளவிலான கொக்கேய்ன் போதைப் பொருள் அவ்வாறு சந்தைக்கு செல்லவில்லை என்ற போதிலும் கடந்த காலங்களில் பிடிக்கப்பட்ட போதைப் பொருட்கள் இவ்வாறு சந்தைக்கு சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.