குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மகளிர் கிரிக்கட் போட்டியொன்றில் அரிய வகை சாதனையொன்றை இளம் வீராங்கனை ஒருவர் படைத்துள்ளார். தென் ஆபிரிக்காவில் 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் கிரிக்கட் போட்டித் தொடரில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இருபதுக்கு 20 போட்டித் தொடரில் இந்த அணியின் ஏனைய வீரர்கள் அனைவரும் ஒட்டம் எதுவும் பெற்றுக்கொள்ளாது ஆட்டமிழந்த நிலையில் ஒரு வீராங்கனை மட்டும் 160 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
முபுலாங்கா 19 வயதுக்கு உட்பட்ட அணியின் சானியா லீ ஸ்டுவார்ட் என்ற வீராங்கனையே இவ்வாறு 160 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டுள்ளார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முபுலாங்கா அணி எட்டு விக்கட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது, இதில் சானியா லீ ஸ்டுவார்ட் 160 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன், ஏனைய ஒன்பது ஓட்டங்களும் உதிரி ஓட்டங்களாகும்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஈஸ்டர்ன்ஸ் 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை இழந்து 127 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.