இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என விடுக்கப்பட்ட அறிவிப்பினால் மக்கள் படும் இன்னல், விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றை தீர்க்குமாறு கோரி மனு ஒன்றை ராகுல் காந்தி பிரதமர் மோடியிடம் வழங்கியுள்ளார்.
சுந்திப்பின் பின்னர் ஊடகங்களுயுக்கு கருத்து தெரிவித்த ராகுல் காந்தி விவசாயிகள் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை பிரதமர் ஏற்றுக் கொண்டார் எனவும் எனினும் அவர்களது கடனை தள்ளுபடி செய்வது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
கடந்த மாதம் உத்தரபிரதேசத்தில் யாத்திரை மேற்கொண்ட ராகுல்காந்தியை சந்தித்த விவசாயிகள் கூறிய குறைகளையும் அவர் பிரதமரிடம் இன்று தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, ஜோதிர் ஆதித்யா, சிந்தியா, ராஜ்பாப்பர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் உடன் இருந்துள்ளனர்.
மோடியின் தனிப்பட்ட ஊழல் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்து இருந்த நிலையில், இருவரும் இன்றைய சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.