சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டியுள்ளதனையடுத்து எதிர்வரும் 21ம் திகதிவரை அந்நகரில் சிகப்பு எச்சரிக்கை நிலை அறிவிக்கப் பட்டுள்ளது. பெய்ஜிங் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் இதைக் கட்டுப்படுத்த பழைய வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒற்றை எண்கள் கொண்ட வாகனங்கள் ஒற்றை எண் திகதிகளிலும் இரட்டை எண்கள் கொண்ட வாகனங்கள் இரட்டை இலக்க திகதிகளிலும் இயக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பெய்ஜிங் நகர் முழுவதும் கட்டுமாணப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் பாடசாலைகள் கல்லூரிகளுக்கு வரும் 21ம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரம் வரை காற்று மாசின் அளவு தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு காற்று மாசு குறைந்தால் சிவப்பு எச்சரிக்கை நிலை நீக்கப்படும் என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது