குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய வளங்களை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினனர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டு வரையில் அரசாங்கம் ஆட்சி நடத்தினால், காவல்துறை திணைக்களம், நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் என்பன மட்டுமே அரச சொத்துக்களாக காணப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எமது தேசிய சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டால் பொருளாதார பாதிப்புக்கள் ஏற்படக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் அரச சொத்துக்கள் விஸ்தரிக்கப்பட்டதாகவும் தற்காலத்தில் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் நல்லாட்சி அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.