குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியன்மாரில் சிறுபான்மை சமூகங்கள் ஒடுக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. சிறுபான்மை இனமான ரொஹிங்கிய முஸ்லிம்கள் மீது பாரிய அளவில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் ராட் செய்ட் அல் ஹூசைன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வன்முறைகளின்போது ரொகிங்கியா முஸ்லிம் மக்கள் மனிதாபிமானமற்ற முறையில் மிலேச்சத்தனமாக தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரொகிங்கியர்கள் மீதான தாக்குதல்களின் போது 89 பேர் மரணித்ததுடன் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.