திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்னை காவேரி மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.
இன்றைய தினம் சென்னை வந்த ராகுல்காந்தி காவேரி மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களின் அனுமதியுடன் கருணாநிதியையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கருணாநிதி மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருப்பதால், அவரை நேரில் பார்க்க வர வேண்டாம் என தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.