174
பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருட புனர்வாழ்வைப் பூர்த்தி செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் மூவர் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற முன்னாள் போராளிகளுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வின் போது அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இம்மூவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய ஒரு வருட புனர்வாழ்வைப் பூர்த்தி செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love