171
நாளையதினம் டெல்லியில் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , அதன்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஓ.பன்னீர்செல்வம் மோடியிடம் வர்தா புயல் நிவாரணத்திற்காக நிதி கேட்கவுள்ளதுடன் வேறு பல கோரிக்கைகளையும் முன்வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதுடன் நாடாளுமன்றத்தில் வெண்கலச் சிலை நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட உள்ளதாகவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love