Home உலகம் ஏமனில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் 30 பேர் பலி :

ஏமனில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் 30 பேர் பலி :

by admin

ஏமனின் துறைமுக நகரான  ஏடனில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏடன் நகரின்  வடகிழக்கில் அமைந்துள்ள  கோர் மக்ஸார் மாவட்ட இராணுவ தலைமையகத்தில் இன்றைய தினம் சம்பளம்  பெறுவதற்காக  இராணுவத்தினர்  பலா் கூடியிருந்த வேளை உடலில் குண்டைக் கட்டியிருந்த நபர் ஒருவர் குண்டை வெடிக்க செய்ததில் 30 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும்,  பலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில்   உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More