138
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரரிடம் காவல்துறையினர் வாக்கு மூலமொன்றை பதிவு செய்து கொண்டுள்ளனர். இஸ்லாமிய மதத்தை இழிவு படுத்தியதாக ஞானசார தேரருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதனையடுத்து ஞானசார தேரரிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அல்லாஹ்வை , ஞானசார தேரர் இழிவுபடுத்தியதாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி முறைப்பாடு செய்திருந்தார்.
Spread the love