குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவுமாறு அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வெளியிட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட எட்வட் ஸ்னோவ்டன் தெரிவித்துள்ளார். ஹொங்கொங்கில் தமக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவுமாறு, ஸ்னோவ்டன் தனது நத்தார் தின செய்தியில் கோரியுள்ளார்.
டுவிட்டர் ஊடாக இந்தக் கோரிக்கையை ஸ்னோவ்டன் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்னோவ்டனுக்கு உதவி வழங்கியவர்களுக்கா நிதி திட்டும் நடவடிக்கையொன்று அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
ஸ்னோவ்டன் ஹொங்கொங்கில் தங்கியிருக்க உதவிய இலங்கையரான சுபுன் திலின கெலபெத்த, அவரது துணை நதீகா மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்தVanessa Mae Bondalian Rodel ஆகியோருக்கு உதவ வேண்டுமென ஸ்னோவ்டன் தெரிவித்துள்ளார்.
ஸ்னோவ்டனுக்கு ஆதரவளித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர்களது சட்டத்தரணி தமக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் ஹொங்கொங் அரசாங்கம் நெருக்கடிகளை வழங்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலையில் தமக்கு உதவியவர்களுக்கு உதவுமாறு ஸ்னோவ்டன் கோரியுள்ளார்.
ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தில்
Dec 19, 2016 @ 06:42
அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வௌியிட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட எட்வட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றார்.
ஹொங்கொங்கில் வைத்து ஸ்னோவ்டனுக்கு இலங்கையரான சுபுன் திலின கெலபாத்த மற்றும் அவரது மனைவி நதீகா தில்ருக்ஸி நோனீஸ் ஆகியோர் அடைக்கலம் வழங்கியிருந்தனர். குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் உரிய நேரத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாகவும் இதனால் சிறையில் தடுத்து வைத்து நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகவும் சீன ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சட்டத்தரணி உரிய நேரத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தரணி ஸ்னோவ்டனுக்கு உதவிகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.