158
இன்று (19) காலை கலஹா காவல்துறை பிரிவிற்குட்பட்ட தெல்தொட்ட கிரேட்வெளி தோட்டதில் இலக்கம் 08 மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்கள் மீது குளவி தாக்கியதால் 08 பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகி தெல்தொட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 03 பேரை மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மரம் ஒன்றில் இருந்த குழவி கூடு ஒன்றினை கழுகு ஒன்று தாக்கியதால் குளவிக்கூடு கலைந்துள்ளதாக தெரிய வருகின்றது.
Spread the love