163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் சில சக்திகள் பிழையான பிரச்சாரம் செய்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கை என்ற கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், பௌத்த மதத்திற்கான முன்னுரிமை பாதிக்கப்படும் எனவும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள அவர் புதிய அரசியல் சாசனத்திலும் பௌத்த மதத்திற்கு உரிய முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love