குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தபால் ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தபால் திணைக்களத்தின் அனைத்து பணியாளர்களதும் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 21ம் திகதி நள்ளிரவு வரையில் தபால் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன.
இவ்வாறான ஓர் பின்னணியில் குறித்த காலப் பகுதியில் எவருக்கும் விடுமுறை வழங்கப்படாது என தபால் மா அதிபர் எல்.பீ.ஆர். அபயரட்ன தெரிவித்துள்ளார். சில தொழிற்சங்கங்கள் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள இவ்வாறு விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்