148
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி ஆயிரம் மில்லியன் ரூபா நட்டஈடு கோரி பேராசிரியர் சரத் விஜேசூரியவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பேராசிரியர் கருத்து வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கருணாசேன ஹெட்டியாரச்சி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் பேராசிரியர் சரத் விஜேசூரிய குற்றம் சுமத்தியிருந்தார். பேராசிரியர் சரத் விஜேசூரிய நீதிக்கான சமூக அமைப்பின் அழைப்பாளராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love