விசேட அபிவிருத்திகள் தொடர்பான சட்டம் மூலம் தொடர்பில் தமது மாகாண சபையின் அனைத்து உறுப்பினர்களினதும் நிலைப்பாடு மிகவும் முக்கியமானது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். இன்று முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதத்தில் சபை உறுப்பினர்கள் ஈடுபட்டிரு்ததால் விசேட அபிவிருத்தி தொடர்பான சட்டமூலத்தை ஆராய்வதற்கு கால அவகாசம் வேண்டும் என்பதால் அது குறித்து ஆராய்ந்ததன் பின்னர் கிழக்கு மாகாண சபையில் விவாதமொன்றை நடத்தியதன் பின்னர் மாகாண சபை உறுப்பினர்களின் நிலைப்பாட்டுக்கமைய விசேட அபிவிருத்திகள் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் மாதம் 30 ஆம் திகதி வரை மாகாண சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் விசேட அபிவருத்திகள் சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பொன்றை நடத்தி அது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.