குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணி வீரர் அல்விரோ பீட்டர்சனுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு 2 வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போட்டி ஒன்றின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து அவருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
36 வயதான அல்விரோ பீட்டர்சன் அந்நாட்டு அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகள் 21 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். விசாரணையின் போது தான் சூதாட்ட தரகரை சந்தித்தமையை ஒப்புக்கொண்ட அல்விரோ பீட்டர்சன் போட்டியின் முடிவை நிர்ணயிக்க பணம் பெறும் எண்ணத்தில் சந்திக்கவில்லை என தெரிவித்துள்ளார்.