குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை வங்கியின் தலைவர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளார். மோசடிக் கொடுக்கல் வாங்கல் ஒன்று தொடர்பில் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து பிரதமர், இலங்கை வங்கியின் தலைவர் ரொனால்ட் சீ. பெரேராவை பணி நீக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வங்கிக்கு சொந்தமான சேலான் வங்கி பங்குகளை விற்பனை செய்தமை குறித்து இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
சேலான் வங்கியின் பெருந்தொகை பங்குகளை இலங்கை வங்கி, ஜப்பானியர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளது. இந்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நிதிச்சந்தை வட்டாரத்தில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.