198
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போகோ ஹாராம் தீவிரவாதிகளின் முக்கிய முகாம் கைப்பற்றப்பட்டுள்ளதாக நைஜீரியா அறிவித்துள்ளது. வடகிழக்கு சாம்பீசா காட்டுப் பகுதியில் காணப்பட்ட போகோ ஹாராம் தீவிரவாதிகளின் முக்கிய முகாம் ஒன்றையே நைஜீரிய இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளாக நைஜீரியாவில் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்கும் நோக்கில் போகோ ஹாராம் தீவிரவாதிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த போராட்டங்களினால் சுமார் 15,000த்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love