Home இலங்கைவேலணையில் தனது மாட்டினை மீட்க கொட்டும் மழைக்குள்ளும் போராடிய பெண்!

வேலணையில் தனது மாட்டினை மீட்க கொட்டும் மழைக்குள்ளும் போராடிய பெண்!

by admin
  பிரதேச சபையினுள் அத்துமீறி நுழைந்து தாவரங்களை சாப்பிட்டதாக பிரதேச சபையினால் பிடித்து கட்டி வைக்கப்பட்ட பசு மாட்டினை , மாட்டின் உரிமையாளரான பெண் கொட்டும் மழைக்குள் போராட்டம் நடாத்தி, 5 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தினை செலுத்தி மாட்டினை மீட்டு சென்றுள்ளார்.

வேலணை பிரதேச சபையின் உப அலுவலக வளாகத்தினுள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ( 7.04.25) உட்புகுந்த பசுமாடு ஒன்று , வாளகத்தில் இருந்த தாவரங்களை சாப்பிட்டு ,  அவற்றை சேதப்படுத்தியுள்ளது.
அதனை அவதானித்த பிரதேச சபை ஊழியர்கள் குறித்த பசுமாட்டை பிடித்து , பிரதேச சபை வளாகத்தில் கட்டி வைத்து பராமரித்து வந்துள்ளனர்.
தனது பசுமாட்டினை காணாது தேடி வந்த பெண் , மாடு பிரதேச சபை உத்தியோகஸ்தர்களால் பிடித்து பிரதேச சபையில் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக அறிந்து தனது மாட்டினை தருமாறு உரிமைகோரியுள்ளார்.
அதன் போது, மாட்டினை விடுவிப்பதற்கு தண்டப்பணத்துடன் , பராமரிப்பு செலவு உள்ளடங்கலாக 5 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தினை செலுத்துமாறு பிரதேச சபையினர் கூறியுள்ளனர்.
பணம் செலுத்த முடியாது என எதிர்ப்பு தெரிவித்து, வேலணை பிரதேச செயலகத்திற்கு சென்று கொட்டும் மழைக்குள் மத்தியில் நின்று , தனது பசுமாட்டை பிரதேச சபையிடம் இருந்து மீட்டு தருமாறு கோரி பிரதேச செயலக பிரதான வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதன் போது பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் , பிரதேச சபைகளுக்கு உள்ள அதிகாரங்கள் , உள்ளூராட்சி சபை சட்டங்களின் அடிப்படையில் தான் அவர்கள் மாட்டினை பிடித்து வைத்துள்ளார்கள். எனவே தண்ட பணத்தினை செலுத்தி மாட்டை மீட்டு செல்லுங்கள் என அறிவுறுத்தி பிரதேச சபைக்கு அனுப்பி வைத்தனர்.
மீண்டும் பிரதேச சபைக்கு சென்ற மாட்டின் உரிமையாளர் பிரதேச சபையில் 5 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தினை செலுத்தி , தனது மாட்டினை மீட்டு சென்றுள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More