குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கைகளை அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டு முதல் காலாண்டு பகுதிக்குள் நிறைவு செய்யப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
சட்டமூலம் ஆக்கப்படவுள்ள சிறுவர் பாதுகாப்பு கொள்கைகள் தொடர்பில், விசேட நிபுணர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுத்தல், துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்களை பாதுகாத்தல் மற்றும் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில் இந்த தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கைகள் அமைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம், சிறுவர் இல்லம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களம் போன்றவற்றின் நிபுணர்களிடம் இருந்து கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.