குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நத்தார் தினத்தை முன்னிட்டு சுமார் 600 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொது மன்னிப்பின் பேரில் 567 சிறைக் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருந்தார். சிறு குற்றங்களுக்காக சிறை வைக்ப்;பட்டுள்ளவர்களே இந்த உத்தரவின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் டி. என். உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
அபராதத் தொகையினை செலுத்த முடியாமல் சிறைவைக்கப்பட்டவர்களும் இந்த பொதுமன்னிப்புக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ளவர்களில் 7 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, நத்தார் பண்டிகை தினைத்தை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளை பார்வையிடுவதற்காக அவர்களின் உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.