Home இலங்கைநத்தார் தினத்தை முன்னிட்டு சுமார் 600 கைதிகள் விடுதலை

நத்தார் தினத்தை முன்னிட்டு சுமார் 600 கைதிகள் விடுதலை

by admin

குளோபல்  தமிழ்ச் செய்தியாளர்

நத்தார் தினத்தை முன்னிட்டு சுமார் 600 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொது மன்னிப்பின் பேரில் 567 சிறைக் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருந்தார்.  சிறு குற்றங்களுக்காக சிறை வைக்ப்;பட்டுள்ளவர்களே இந்த உத்தரவின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் டி. என். உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

அபராதத் தொகையினை செலுத்த முடியாமல் சிறைவைக்கப்பட்டவர்களும் இந்த பொதுமன்னிப்புக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ளவர்களில் 7 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, நத்தார் பண்டிகை தினைத்தை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளை பார்வையிடுவதற்காக அவர்களின் உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More