222
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தனியார் ஊடகங்களில் காவல்துறை செய்தி வழங்கப்படாது என்ற செய்திகளில் உண்மையில்லை காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். தனியார் ஊடகங்களுக்கு நாளாந்த காவல்துறை செய்திகளை வழங்க வேண்டாம் என காவல்துறை மா அதிபர் உத்தரவிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்க வேண்டாம் என காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டிருந்தார் என சில ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love