தொழில்நுட்பக் கோளாறால் திசை மாறிய மும்மை விமானம் :
இந்தியாவின் கோவா தபோலிம் விமான நிலையத்தில் இன்று காலை, மும்பைக்கு புறப்பட்ட ஜெட் ஏயார்வேஸ் 9W 2374 விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தடுமாறி திசை மாறி நகர்ந்துள்ளது.
இதன் காரணமாக பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், அனைவரும் பாதுகாப்பாக விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர் எனவும் ஜெட் ஏயார்வேஸ் அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்தால் சிலமணிநேரம் கோவா தபோலிம் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி – மும்பை கோவா விமான நிலையங்களில் இடம்பெற இருந்த அனர்த்தங்கள் தடுக்கப்பட்டன:-
இரு விமானங்கள் நேருக்குநேர் மோத இருந்த அசம்பாவிதம் தவிர்ப்பு – பயணிகள் பீதி
டெல்லி விமான நிலையத்தின் ஓடுபாதையில் இன்று இரு விமானங்கள் நேருக்குநேர் மோத இருந்த அசம்பாவிதம் அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இது தொடர்பாக வெளியான முதல்கட்ட தகவலின்படி, பயணிகளை இறக்கி விட்டுவிட்டு நிறுத்துமிடம் நோக்கி ஓடுபாதையில் மெதுவாக ஊர்ந்து சென்ற ஏர் இண்டிகோ விமானம் சென்ற அதே பாதையில் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானமும் எதிர்பாராதவிதமாக வர நேரிட்டது.
இதனால், ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பீதியால் அலறினர். விமானத்தின் வேகத்தை சமயோஜிதமாக இரு விமானிகளும் குறைத்து கொண்டதால் இன்று தலைநகர் டெல்லியில் ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.