Home இலங்கைஉள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் கட்சி பாரிய தோல்வியடையும் – வாசுதேவ

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் கட்சி பாரிய தோல்வியடையும் – வாசுதேவ

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் கட்சி பாரிய தோல்வியைத் தழுவும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட உள்ள நிலையில் இந்த தேர்தலின் போது அரசாங்கம் பாரிய தோல்வியைத் தழுவும் என நாணயக்கார எதிர்வு கூறியுள்ளார்.

எதிர்வரும் 2017ம் ஆண்டு அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமானது எனவும் ஆட்சியில் நீடிப்பதா அல்லது விட்டுச் செல்வதா என்பதனை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டிய காலமாக இது அமையும் எனவும் தெரிவித்துள்ள அவர் அடுத்த ஆண்டில் மக்கள் கிளர்ச்சிகள் போராட்டங்கள் அதிகளவில் வெடிக்கும் எனவும், மக்களின் வாழ்க்கைச் செலவு பாரியளவில் உயர்வடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் அரச சொத்துக்களை விற்பனை செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் அரசாங்கத்திற்கு எதிராக அடுத்த ஆண்டில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More