குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
அரசாங்கத்தின் 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து கொள்ள உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 10 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்ட 20 பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாறு இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையின் செயற்பாடுகள் குறித்து கட்சியின் உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, ஆளும் கட்சிக்குள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் தெளிவான முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.