Home பிரதான செய்திகள்ஸ்வன்சா சிட்டி கழகம் பயிற்றுவிப்பாளரை பணி நீக்கியது

ஸ்வன்சா சிட்டி கழகம் பயிற்றுவிப்பாளரை பணி நீக்கியது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்வான்சா சிட்டி கழகத்தின் பயிற்றுவிப்பாளரான பொப் பிராட்லி பணி நீக்கப்பட்டுள்ளார். பிரிமியர் லிக் கழகங்களில் ஒன்றான ஸ்வான்சா சிட்டி கழகத்தில் பயிற்றுவிப்பாளராக இணைந்து கொண்டு 85 நாட்களில் இவ்வாறு அவர் பணி நீக்கப்பட்டுள்ளார்.

அணி சந்தித்து வரும் தொடர் தோல்விகளே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒக்ரோபர் மாதம் 3ம் திகதி அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பினை பொப் பிராட்லி ஏற்றுக்கொண்டதன் பின்னர் 11 போட்டிகளில் ஏழு போட்டிகளில் அணி தோல்வியடைந்துள்ளது.
பிராட்லி ,  பிரிமியர் லீக் கழகமொன்றினை பயிற்றுவித்த முதல் அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More