குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொதுத் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. விருப்பு வாக்கு அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள பொதுத்தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அரசியல் சாசனத்தில் 20ம் திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்தி தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இவ்வாறு தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்படும் எனவும் 20ம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் தொகுதிவாரி அடிப்படையில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அமுலில் உள்ள விருப்பு வாக்கு முறையில் காணப்படும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் புதிய முறை அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தாது 20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரங்களை குறைத்துக் கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.