குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய துக்க தினம் அனுஸ்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் மறைவினை ஒட்டி தேசிய துக்க தினம் அனுஸ்டிக்கப்பட உள்ளதாக அரச நிர்வாக அமைச்சு அறிவித்திருந்தது.
முன்னதாக 31ம் திகதி அனுஸ்டிக்கப்படும் எனவும் பின்னர் 30ம் திகதி அனுஸ்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் பின்னர் முன்னாள் பிரதமர் ரட்னசிறியின் குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய தேசிய துக்க தினத்தை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், அன்னாரின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் மேற்கொள்ளப்பட உள்ளது.
தேசிய துக்க தினத்தில் மாற்றம்
Dec 28, 2016 @ 08:02
தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் மறைவினை ஒட்டி தேசிய துக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எதிர்வரும் 31ம் திகதி தேசிய துக்க தினம் அனுஸ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அரச நிர்வாக அமைச்சினால் தேசிய துக்க தினம் பற்றி அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போது தேசிய துக்க தினம் எதிர்வரும் 31ம் திகதி அல்ல எனவும், 30ம் திகதி அனுஸ்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தினத்தில் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
31ம் திகதி தேசிய துக்க தினம்
முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் மறைவினை ஒட்டி எதிர்வரும் 31ம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதென அரச நிர்வாக அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். பூரண அரச அனுசரணை மற்றும் மரியாதையுடன் எதிர்வரும் 31ம் திகதி ஹொரணையில் அன்னாரின் இறுதிக் கிரியைகள் நடத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவிற்கு இரங்கல் வெளியிடும் வகையில் அரச நிறுவனங்களில் தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும் அவர் கோரியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 31ம் திகதி மதுபான கடைகள் மூடப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வஜிர அபேகுணவர்தன இது குறித்து இன்னமும் திர்மானிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.