162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்ய இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளானமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விமானத்தின் கறுப்புப் பெட்டியொன்றின் ஊடாக விசாரணகைள் நடத்தப்பட உள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் 92 பேர் உயிரிழந்தநிலையில் இதுவரையில் 12 பேரின் சடலங்கள்; மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்திற்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை எனினும், பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருக்கக்கூடிய சாத்தியம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தின் கறுப்புப் பெட்டியின் ஊடாக பல்வேறு முக்கிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Spread the love