குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தலை மேலும் காலம் தாழ்த்த முயற்சிக்கப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு நிறுவனமான கபே தெரிவித்துள்ளது. எல்லை நிர்ண சபையும், உள்ளுராட்சி மன்ற அமைச்சும் கூட்டாக இணைந்து வேண்டுமென்றே திட்டமிட்ட வகையில் தேர்தலை காலம் தாழ்த்தி வருவதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அனைத்து உறுப்பினர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய அறிக்கை நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்படவிருந்த போதும் மொழி பெயர்ப்பு பிரச்சினை காரணமாக இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலை காலம் தாழ்த்தும் நோக்கில் இவ்வாறு பல்வேறு காரணங்களை காண்பித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.