குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெகு விரைவில் நாட்டின் தேசிய விளையாட்டில் மாற்றம் செய்யப்படும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். விரைவில் உத்தியோகபூர்வமாக இது குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய தேசிய விளையாட்டாக கரப்பந்தாட்டம் காணப்படுகின்றது.
இலங்கையில் கரப்பந்தாட்டம் தேசிய விளையாட்டு என்பதற்கு எவ்வித சட்ட ரீதியான ஆவணங்களும் விளையாட்டுத்துறை அமைச்சில் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 1916ம் ஆண்டில் அமெரிக்காவில் கரப்பந்தாட்டம் அமெரிக்கப் பிரஜையான Robert Walter னால் அறிமுகம் செய்யப்பட்டது.
அமைச்சரவையின் அனுமதியின்றி அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சரான நந்த மெத்யூவினால் கரப்பந்தாட்டத்தை தேசிய விளையாட்டாக 1992ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இலங்கையே முதன் முதலாக கரப்பந்தாட்டத்தை தேசிய விளையாட்டாக தெரிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.