குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் வட்டாரத் தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளன.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற கூட்ட எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் அரசியல் ரீதியான காரணிகள் பற்றி பேசியுள்ளனர்.
இதன் போது சுதந்திரக் கட்சியில் பிளவு இன்றி முன்நோக்கி நகர்த்தப்பட வேண்டுமென இரு தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொகுதிவாரி அடிப்படையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுவதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கூடுதலான சந்தர்ப்பம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொகுதி அமைப்பாளர்கள் சிறந்த முறையில் தங்களது பணிகளை ஆற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தை விட்டு விலகினால் எந்த சந்தர்ப்பத்திலும் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்கத் தயார் என கூட்டு எதிர்க்கட்சியினர் உறுதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.