160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்தி வைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. எல்லை நிர்ணயம் தொடர்பிலான பிரச்சினைகளை காரணம் காட்டி அரசாங்கம் இவ்வாறு தேர்தலை காலம் தாழ்த்தி வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளின் தேவைகளுக்காக எல்லை நிர்ணயக் குழுவினர் தமது நடவடிக்கைகளை மாற்றியமைத்துக் கொள்ளக் கூடாது என கோரியுள்ள அவர் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் திட்டமிட்ட வகையில் இந்த அறிக்கையை பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love