140
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்ய சைபர் தாக்குதல் தொடர்பில் பொறுமை காத்தது போதும் என அமெரிக்க செனட்டர் லின்ட்ஸ்சே கிரஹாம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது என்பதனை ரஸ்யா புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் பொறுமை காத்தது போதும் என்பதனை ரஸ்யாவிற்கு உணர்த்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் சைபர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை ரஸ்யா நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love