மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சட்டவிரோத மதுபானசாலைகளை மூடுமாறு கோரி, காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று (வியாழக்கிழமை) பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் பொதுச்சந்தை ஆகியவற்றிற்கு அருகில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைகளால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்வதுடன், வீதி விபத்துகளும் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள மக்கள், புதிய ஆண்டில் குறித்த மதுபானசாலைகளின் அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்கக் கூடாதென வலியுறுத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து, ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதற்கான மகஜரொன்றும் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.