Home இந்தியாஅ.தி.முக பொதுச் செயலாளராக சசிகலா தெரிவுசெய்யப்பட்டார்:-

அ.தி.முக பொதுச் செயலாளராக சசிகலா தெரிவுசெய்யப்பட்டார்:-

by admin

அதிமுக பொதுச்செயலாளராக கட்சியின் சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு rrpfyh நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அதிமுக. செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முதலில் ஜெயலலிதா மறைவுக்கு எழுந்து நின்று இரங்கல் தெரிவித்தனர். அவர் பயன்படுத்திய நாற்காலியில் ஜெயலலிதாவின் படத்தை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

செயற்குழுக் கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  பொதுக்குழுவில்  14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெயலலிதாவிற்குப் பின்னர் வி.கே. சசிகலாவிடம் அதிமுக தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச்செயலாளராக கட்சியின் சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். செங்கோட்டையின் இந்த தீர்மானத்தை வழி மொழிந்தார். இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தம்பித்துரை ஆகியோரும் போயஸ் தோட்டத்திற்கு சென்று சசிகலாவை சந்தித்து தீர்மானத்தை வழங்கியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More